2வது நாளாக மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 15: திருத்துறைப்பூண்டி பகுதியில் 2வது நாளாக மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியிலுள்ள கிராமங்கள், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பல கிராமங்கள், மன்னார்குடி தாலுகாவில் ஒரு சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்கம் ஏற்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில்  சிசிச்சை பெற்று சென்றுள்ளனர்.

மேலும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நேற்று 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி பகுதியில் இரண்டாவது நாளாக மாவட்ட பூச்சியியல் வள்ளுநர் பழனிச்சாமி, கொல்லை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் காயத்திரி, வட்டார மருத்துவ அலுவலர் கவுரி தலைமையில் மாவட்டம் முழுவதுமிருந்து வந்துள்ள மருத்துவ குழுவினர்கள், செவிலியர்கள் கிராமம் கிராமமாக சென்று வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதனை சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இணை இயக்குநர் பிரேம்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: