10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் 66 மையங்களில் 15,314 பேர் எழுதினர் 1,061 பேர் ஆப்சன்ட்

திருவாரூர், மார்ச் 15: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 66 மையங்களில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம்  15 ஆயிரத்து 314 மாணவ, மாணவிகள் எழுதினர். ஆயிரத்து 61 பேர் தேர்வெழுத வரவில்லை.  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வானது நேற்று முதல் துவங்கியது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுதுவதற்கு 8 ஆயிரத்து 141 மாணவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 234 மாணவிகள் மற்றும் 247 தனி தேர்வர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 375 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற மொழி பாட தேர்வினை 7 ஆயிரத்து 923 மாணவர்கள், 7 ஆயிரத்து 391 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 314 பேர்  எழுதினர். மேலும் பல்வேறு காரணங்களினால் ஆயிரத்து 61 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களை கொண்ட 6 சிறப்பு பறக்கும்படை, 940 அறைக் கண்காணிப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 84 நிலையான படை குழுவினரை கொண்ட அலுவலர்கள்  பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: