குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 23,986 பேர் எழுதினர்

நாகர்கோவில், மார்ச் 15: குமரி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 23 ஆயிரத்து 986 பேர் எழுதினர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ் 1 தேர்வுகளும் மார்ச் 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று பிற்பகல் தமிழகம் முழுவதும் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் தக்கலை கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 3314, மாணவர்கள் 3258 என்று 6572 பேரும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 2414, மாணவர்கள் 2462 என்று 4876 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 3939, மாணவர்கள் 3974 பேரும், திருவட்டார் கல்வி மாவட்டத்தில் மாணவிகள் 2374, மாணவர்கள் 2251 என்று 4625 பேரும் என மொத்தம் 12,041 மாணவிகளும், 11945 மாணவர்களும் என்று மொத்தம் 23 ஆயிரத்து 986 பேர் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தேர்வை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 60 பறக்கும்படைகளும், ஆசிரியர்களை கொண்ட 224 நிலையான பறக்கும்படைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. 18ம் தேதி தமிழ் 2ம் தாள், 20ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 22ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் ஆகிய முதல் 4 தேர்வுகளும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளது. 25ம் தேதி கணிதம், 27ம் தேதி அறிவியல், 29ம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் காலையில் 10 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை காலையிலும், பிற்பகலும் என்று இரு வேளையில் தேர்வு நடத்தும் வகையில் தேர்வு கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது.

Related Stories: