குலசேகரன்பட்டினத்தில் மின்கட்டணம் செலுத்த வசதி

உடன்குடி,மார்ச் 15: குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் மின்கட்டணம் செலுத்தும் இடத்தை குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் எஸ்டிபிஐ நிர்வாகிகள் தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்பகிர்மான அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டணமின்றி மின்கட்டணம் செலுத்தும் வசதி செயல்பட்டு வந்தது. இதனால் குலசேகரன்பட்டினம், சிறுநாடார்குடி யிருப்பு, மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் இதன் மூலம் பயன் பெற்று வந்தனர். மின்கட்டணம் செலுத்தும் வசதி கணினி மயமாக்கப்பட்டதால் இந்த வசதி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டணமின்றி மின்கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: