பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள், அமமுகவினர் போராட்டம்

தூத்துக்குடி, மார்ச் 15:பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி தூத்துக்குடிகாமராஜ் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொள்ளாச்சி பகுதியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது.தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும் மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். மேலும் அவர்கள் அங்கு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை மூடி மறைத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும், பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பாலன், மாநில மீனவரணி இணைச் செயலாளர் சுகந்தி கோமஸ், மாநில இளைஞர் பாசறை இணைச் செயலாளர் மனோகரன், மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெரியசாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் கோசல்ராம், மாவட்ட பொருளாளர் பிரைட்டர், மாவட்ட மகளிரணிச் செயலாளர் அந்தோணி கிரேஸ், அமைப்புசார ஓட்டுநர் அணிச் செயலாளர் இசக்கிசெல்வம், பகுதி செயலாளர்கள் எட்வின் பாண்டியன், அசோக்குமார், ஆறுமுகம், கோட்டாளமுத்து, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சிவதுரையரசன், துணை தலைவர் சண்முககுமாரி, ஒன்றிய செயலாளர்கள் முருகன், சிவசுப்பிரமணியன், அம்மன் நாராயணன், பொன்ராஜ், திவாகரன், திருச்செந்தூர் மணிகண்டன், ஆத்தூர் முருகானந்தம், ஏரல் ரமேஷ், விவசாய அணி முத்துபாண்டியன், மகளிரணி இணை செயலாளர் விஜயலெட்சுமி, துணை செயலாளர் ராமேஸ்வரி, தொழில்நுட்ப அணி சிவா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், துணை செயலாளர் ரூஸ்வெல்ட்ஜெபராஜ், நிர்வாகிகள் ரமேஷ் கிருஷ்ணன், காசிலிங்கம், ஸ்டீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக டபுள்யு.ஜி.சி. ரோட்டிலுள்ள தெற்குமாவட்ட அமமுக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: