மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை

வேதாரண்யம், மார்ச் 15: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல்அலுவலர் ரஞ்சித் கேட்டுகொண்டுள்ளார். வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் இப்பகுதி மக்களுக்கு திருத்துறைபூண்டியிலிருந்து மூன்றரை     லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.  தற்போது கோடைகாலம் என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது.  தற்போது பருவகால மாற்றத்தால் தண்ணீரை நேரடியாக பயன்படுத்தாமல் காய்ச்சி குடிக்க வேண்டும்.  மேலும் குடிநீர் குழாய்களில் பேரூராட்சி பகுதிகளில் சட்ட விரோதமாக மோட்டார் வைத்து தண்ணீரை எடுத்தால் மின் இணைப்பும், குடிதண்ணீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: