உரிய அனுமதி பெறாமல் சுகாதாரமற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு

நாகை, மார்ச் 15: நாகையை அடுத்த நாகூர் பண்டக சாலைத் தெருவில் வட மாநில இளைஞர்களால் அனுமத்திக்கப்படாத கலர்களை கொண்டு ஐஸ்கிரீம் மற்றும் பஞ்சுமிட்டாய் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரண்டு வீடுகளில் வைத்து ஐஸ்கிரீம் தயாரிப்பது தெரியவந்தது. தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற நிலையில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும் உணவு பொருள் தயாரிக்க, விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெறாமல்  இருந்ததும் தெரியவந்தது.

மேலும் நாகூர் வண்ணான்குளம் அருகே உள்ள அமிர்தா சுனாமி குடியிருப்பு பகுதியில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கும் சென்று  ஆய்வு செய்தபோது  அங்கு பாலித்தின் கவர் இல்லாததால் பஞ்சுமிட்டாய் தயாரிப்பு நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து  தரமற்ற, அனுமதி இல்லாத உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: