குத்தாலத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மார்ச் 15: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழக கட்டிடத் தொழிலாளர்கள்  மத்திய சங்கத்தினர் குத்தாலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகை மாவட்டம்  மயிலாடுதுறை அருகே குத்தாலம் பேருந்துநிலையம் அருகே  தமிழக கட்டிடத்  தொழிலாளர்கள் மத்திய சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய  தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பொன்குமார் தலைமையில் மயிலாடுதுறை  முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், ஜெகமுருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மாநில அரசைக் கண்டித்தும் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மற்றும்  பொள்ளாச்சி சம்பவம் குறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 ஆர்ப்பாட்ட முடிவில் பொன்குமார் தெரிவித்ததாவது:பொள்ளாச்சியில்,  200க்கும்மேற்பட்ட  பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை   கண்டித்தும், குற்றவாளிகளை தப்புவிக்க முயற்சி  மேற்கொண்ட ஆளுங்கட்சி  பிரமுகர்கள்  மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும், குற்றவாளிகளுக்க  கடுமையான  தண்டனை வழங்க வேண்டும், மணல் தட்டுப்பாட்டை நீக்காததால் ஒரு  மாதத்தில் சிமென்ட் விலை ரூ.100 ஏற்றம் கண்டுள்ளதை கண்டிப்பது. இந்த  விலை உயர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிகையும்  எடுக்கவில்லை, ஆகையால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என்றார்,

Related Stories: