கொடியம்பாளையம் தீவு கிராம வாக்குசாவடியில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

கொள்ளிடம், மார்ச் 15: கொள்ளிடம் அருகே உள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியை நாகை கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் எஸ்பி ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.நாகை மாவட்டத்தில் உள்ள ஒரே தீவு கிராமம்  கொடியம்பாளையம் ஆகும்.இத்தீவிற்கு கடலூர் மாவட்டம் வழியாக சாலை மற்றும்  பாலம் வசதி ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.இத்தீவு  கிராமத்திற்கு நாகை மவட்டத்திலிருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக  செல்லும் வகையில் பாலம் கட்டப்பட்டு கடந்த பத்து வருடங்களாக சாலை வழி  போக்குவரத்து நடைபெற்று வருகிறது.சாலை வழி  இருந்த போதிலும் கடந்த  சட்டமன்ற  தேர்தலுக்கு முன்பு வரை பழையார் மீன்பிடி துறைமுகம் வழியாக  படகில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள்  சென்று வந்ததோடு,வாக்குபதிவு முடிந்ததும் அன்று இரவே படகில் வாக்கு  பெட்டிகளுடன் அதிகாhpகள் திரும்பி வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சட்டமன்ற  தேர்தலிலிருந்து வாக்குபெட்டிகள் சிதம்பரம் வழியாக சாலை மார்க்கத்திலேயே  கொடியம்பாளையத்திற்கு சென்று,வாக்குபதிவிற்கு பின்பு மீண்டும் எடுத்து  வரப்படுகிறது.இந்நிலையில் கொடியம்பாளையத்திலுள்ள வாக்கு சாவடியை நாகை  கலெக்டர் சுரேஷ்குமார், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடிக்கு சென்று காற்றோட்ட வசதி,குடிநீர் வசதி  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேற்று நோpல் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார். இத்தீவு கிராமத்தில் 415 வீடுகளில் மக்கள்  வசிக்கின்றனர்.1009 வாக்காளர்கள் உள்னர்.தற்போதைய தேர்தலுக்கு சாலை  வழியாகவே வாக்கு பெட்டிகள் எடுத்து செல்ல படும் என கூறப்படுகிறது..உடன்  நாகை எஸ்பி விஜயக்குமார் மற்றம் அதிகாரிகள் சென்றனர்.

Related Stories: