பட்டமளிப்பு விழா

வேதாரண்யம், மார்ச் 15: வேதாரண்யத்தில் நாகை சாலையில் உள்ள  பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரி கல்லூரியில் நடைபெற்ற 5வது பட்டமளிப்பு விழாவில் 447 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு  பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் மணலி சோமசுந்தரம் தலைமை வகித்து 38 மாணவர்கள் உள்ளிட்ட 447 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்பபுரையாற்றினார்.  பட்டம் பெற்றவர்களில் 356 பேர் இளங்கலை மாணவர்கள். 91 பேர் முதுகலை மாணவர்கள். முன்னதாக கல்லூரி முதல்வர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.  துணை முதல்வர் பிரபாகரன், நாட்டு நலப்பணித்திட்ட ராஜா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பெற்றோர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: