நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணி முடிந்தும் நெல்லை விற்க முடியவில்லை விவசாயிகள் வேதனை

கீழ்வேளூர், மார்ச் 15:  நாகை மாவட்டம் கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல், கீழையூர், தலைஞாயிறு பகுதிகளில் இந்த ஆண்டு சம்பா  நெல் சாகுபடி நடைபெற்றது. தண்ணீர் தட்டுப்பாடு, ஆள் தட்டுப்பாடு, கஜா புயல் போன்ற பல்வேறு பாதிப்புகளை கடந்து இந்த ஆண்டு சம்பா  நெல் அறுவடை பணி நடைபெற்றது.  இந்த ஆண்டு 80 சதவிதம் அளவிற்கு  இயந்திரம் கொண்டு அறுவடை பணி நடைபெற்றது. பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததாலும், குறைந்த மழையாலும் காலத்தில் சம்பா பணி செய்ய முடியாததால் குறைந்த மகசூல் கிடைத்தது. அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய 20 நாள் காத்திருந்து விற்பனை செய்த பின் அதற்கான தொகை கிடைக்க சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.  தற்போது சம்பா நெல் அறுவடை பணி நிறைவடைத்துள்ளது. ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் கொண்டு சென்ற நெல்லை அரசு கொள்முதல் செய்து கொள்ளததால் நெல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.  தற்போது 100 சதவீதம் அறுவடை பணி முடிந்தாலும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் காத்து கிடக்கின்றனர் என்பது வேதனையாக உள்ளது.

Related Stories: