பெரம்பலூர் எம்பி. தேர்தலுக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

குளித்தலை, மார்ச் 15:  பெரம்பலூர் எம்.பி.  தொகுதிக்குட்டப்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சியினர்  ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை ஆர்டிஓ லியாகத் தலைமை  வகித்தார். தாசில்தார் சிவகுமார், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஆர்டிஓ நேர்முக உதவியாளர் முருகேசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.பி. தேர்தல் நடைமுறை அமலுக்கு  வந்துள்ளதால் அனுமதி இல்லாமல் தனியார் சுவற்றில் மற்றும் பொது இடங்களில்  விளம்பரம் செய்யக்கூடாது. ஒலிபெருக்கியை தேர்தல் ஆணையம் விதித்துள்ள  நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும். மேலும் தேர்தல் விதிமுறை  கடைபிடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவுபடி குளித்தலை சட்டமன்றத்திற்குட்பட்ட  எல்லை பகுதியில் தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்கள் மற்றும்  நிகழ்ச்சிகளை கண்காணிக்க நிலையான கண்காணிப்பு குழு செயல்படும்.

இந்த குழு  அனைத்து நிகழ்ச்சிகளையும் படம் எடுக்கும். மேலும் பறக்கும் படை அதிகாரிகள்  மற்றும் போலீசார் கொண்ட 3 குழுக்கள் ஆங்காங்கே வாகன சோதனையில்  ஈடுபடுத்தபடுவார்கள். ஒரு குழு தேர்தல் கணக்கு பராமரிப்புக்காக  செயல்படும். அதனால் அனைத்து கட்சி நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு தர  வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதில் திமுக,  அதிமுக, பாஜ, விசி, காங்கிரஸ், தேமுதிக,  கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: