ஆத்தூர் பூலாம்பாளையத்தில் அங்கன்வாடி மைய செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு பேரணி

க.பரமத்தி, மார்ச் 15: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கரூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆத்தூர்பூலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதன் தொடக்க விழாவிற்கு அங்கன்வாடி மைய பணியாளர் ஜெயமணி வரவேற்றார். ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சவிதா தலைமை வகித்தார்.சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் பிரபு, அங்கன்வாடி மைய பணியாளர்கள் தமிழரசி, சரஸ்வதி, கமலேஸ்வரி, இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இணை உணவும், அறிவு வளர்ச்சிக்கு முன்பருவ கல்வியும், சத்தான உணவினை உட்கொள்ளவும், தாய்பால் கொடுத்தல், கற்பகாலத்தில் முறையான தடுப்பூசி மற்றும் ஊட்டசத்து பெற்றிட வேண்டும், குழந்தைகளுக்கு 2வயது முடிந்தவுடன் இலவச நர்சரி கல்விக்காக அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பிவாறு பள்ளி, மாணவ, மாணவியர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு சைக்கிள் பேரணியில் சென்றனர். பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: