கரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொது தேர்வு துவக்கம்

கரூர், மார்ச் 15: 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று (14ம்தேதி) முதல் வரும் 29ம்தேதி வரை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் 40 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்பட 197 பள்ளிகளை சேர்ந்த 6,314 மாணவர்கள், 6,073மாணவிகள் என மொத்தம் 12,721 பள்ளி மாணவ மாணவியர்கள் 53தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என 1102 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நேற்று துவங்கிய தேர்வை 353 மாணவ, மாணவிகள் எழுதவில்லை.

Related Stories: