வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழப்பை தடுக்க ெஹல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது விரைவில் அமல்படுத்த எஸ்பி ஆலோசனை

வேலூர், மார்ச் 15: வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழப்பை தடுக்க ெஹல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது. இந்த நடைமுறையை விரைவில் அமல்படுத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் எஸ்பி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சாலை விபத்துக்களினால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் அமைப்பினர் சேர்க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலை விபத்தை குறைக்கும் வண்ணம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், சாலை பாதுகாப்பு குழுவை சேர்ந்த போலீசார் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் காவலர் மண்டபத்தில் நேற்று நடந்தது. எஸ்பி பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். வேலூர் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், டிஎஸ்பி ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எஸ்பி பிரவேஷ்குமார் பேசுகையில், ‘சாலை விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் வேலூர் மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பெட்ரோல் பங்குகளில் ெஹல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடக்கூடாது. இதற்கு பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: