நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி சட்டமன்ற தொகுதிக்குள் தாசில்தார்கள் பணிமாற்றம்

பெரம்பலூர், மார்ச் 14: நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளின்படி, தாசில்தார்கள் வெளிமாவட்டத்திற்குப் பணிமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், பெரம்பலூர் பாரதிவளவன், வேப்பந்தட்டை கவிதா, குன்னம் சித்ரா, ஆலத்தூர் ஷாஜஹான் ஆகிய 4 ரெகுலர் தாசில்தார்கள் அனைவரும் அரியலூர் மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர்.       இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் ரெகுலர் தாசில்தார்கள் மீது பிறப்பித்த வெளி மாவட்ட பணிமாற்ற உத்தரவை ரத்து செய்து, சொந்த சட்டமன்ற தொகுதிக்குள் பணிபுரிந்தாலோ, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தாலோ, சொந்த ஊர் அமைந்துள்ள தாலுகாவில் பணிபுரிந்தாலோ பணிமாற்றம் செய்ய வேண்டுமென்ற மாற்று உத்தரவை பிறப்பித்தது.இதன்படி பெரம்பலூர் தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த பாரதிவளவன் சமூகப் பாதுகாப்புத்திட்ட தாசில்தாராகவும், பெரம்பலூர் சமூகப் பாதுகாப்புத்திட்ட தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த செல்வராஜ், குன்னம் ரெகுலர் தாசில்தாராகவும், குன்னம் ரெகுலர் தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த சித்ரா, பெரம்பலூர் ரெகுலர் தாசில்தாராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: