அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்

டெல்டா பாசன பகுதிகளில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயி களிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணத்தை அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்துவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்னையில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும் நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாறு வங்கி கணக்குகளில் பணம் செலுத்துவது ஒரு மாதம் வரை தாமதமாகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். இது தொடர்பாக குறைதீர் முகாம்களிலும் விவசாயிகள் சந்தித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விவசாயிகள் நெல் விற்ற பணத்தில் தான் உழவுக்கூலி, வேளாண் இடுபொருட்களுக் காக வாங்கிய கடன், அறுவடை கூலி போன்றவற்றுக்கு கொடுக்க வேண்டிய நிலை யுள்ளது. இந்நிலையில் பணம் கிடைப்பது தாமதமானதால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கிடையில் உணவுத் துறை அமைச்சர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த மாவட்ட த்தில் மட்டும் நெல்லுக்குரிய பணம் விவசாயிகளது வங்கி கணக்குகளில் விரைவாக வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாவது: விவசாயிகள் அவசர தேவைக்காகத்தான் நெல்லை விற்கிறார்கள். விற்ற நெல்லுக் கான பணம் கணக்கில் செலுத்த பல வெகு நாட்களாகின்றன. சில இடங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக வும் வரவு வைக்கப்படுவதில்லை. இதுகுறித்து அந்தந்த மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

பயிர் காப்பீட்டுத் தொகை பெறுவதிலும் இதே போன்று பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. எங்கள் பிரச்னைகளுக்கு அரசு அதிகாரிகள் செவிசாய்ப் பதில்லை என்பது வேதனையளிக்கிறது. இதனால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதி கள் நடைமுறைக்கு வந்துள்ளதால் விவசாயிகள் தெரிவிக்கும் பிரச்னைகளில் தேர்தல் ஆணையம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories: