கேந்திர வித்யாலயா பள்ளியில் பொதுத் தேர்வு மையங்கள் கலெக்டர் நேரில் ஆய்வு

பெரம்பலூர், மார்ச் 14: கேந்திர வித்யாலயா பள்ளியில் நடைபெற்று வரும் பொதுத்  தேர்வு மையங்களை பெரம்பலூர்  கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2ம்தேதி முதல் ஏப்ரல்  2ம்தேதி வரை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ஆல்மைட்டி  வித்யாலயா, ஹேன்ஸ் ரோவர், கோல்டன்கேட்ஸ் பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா  பள்ளிகளைச் சேர்ந்த 111 மாணவ, மாணவிகள் முதன்முதலாக பெரம்பலூரிலுள்ள  கேந்திர வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில்  தேர்வெழுதி வருகின்றனர். மேலும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வை  கேந்திர வித்யாலயா பள்ளியை சேர்ந்த 28 மாணவ, மாணவிகளும்  இந்த தேர்வு மையத்தின் மூலமாக எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

  அதன்படி இந்த கேந்திர வித்யாலயா பள்ளி வளாகத்திலுள்ள தேர்வு  மையத்தில் நடந்துவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நேற்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது, தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தேவையான  அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும்  கலெக்டர் விசாரணை நடத்தி அறிந்துகொண்டார்.

ஆய்வின்போது தேர்வு மைய  கண்காணிப்பாளர் சர்மிளா, கேந்திர வித்யாலயா பள்ளி துணை முதல்வர்  தமிழ்ச்செல்வன், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் சித்ரா  ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: