பள்ளி ஆண்டு விழா

திருவில்லிபுத்தூர், மார்ச் 14: திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியின் 15வது ஆண்டு விழா, திருவண்ணாமலை அருகே, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தாளாளர் முருகேசன் வரவேற்றார். முதல்வர் ராணி முருகேசன் பள்ளி சிறப்பு குறித்து பேசினார். ஆசிரியை அங்காள ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். ‘இதயம்’ குரூப் சேர்மன் ரோட்டரி மேஜர் டோனர் முத்து தலைமை வகித்தார். ராஜபாளையம் ரோட்டரி சங்கத் தலைவரும், சத்யா வித்யாலயா பள்ளி சேர்மனுமான குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருவில்லிபுத்தூர் கிரீன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர் விழாவை வாழ்த்தி பேசினார்.

சிறந்த பள்ளிக்கான விருதை, சத்யா வித்யாலயா  பள்ளி சேர்மன் குமரேசன், மகாத்மா வித்யாலயா பள்ளி தாளாளர் முருகேசனிடம் வழங்கினார். விழாவில் மாணவர்களின் படைப்புகளான ‘சிந்தனை சிறகுகள்’ என்ற புத்தகத்தை இதயம் சேர்மன் முத்து வெளியிட்டார். தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விழாவில் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த எழுத்து தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்கள் அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை உஷாராணி நன்றி தெரிவித்து பேசினார். விழாவில் பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகாத்மா பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: