திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

திருவில்லிபுத்தூர்/ராஜபாளையம், மார்ச் 14: திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில்,  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி செல்வக்குமார் தலைமை வகித்தார்.

திருவில்லிபுத்தூர் தாசில்தார் அறிவழகன், வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி, தனி தாசில்தார் சிவஜோதி மற்றும் துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இ.கம்யூ.,கட்சி, பாஜ, நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டியது, பின்பற்றக் கூடாதது ஆகியவை குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

ராஜபாளையம்: ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘நாடாளுமன்ற தேர்தல் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை குறித்தும், கட்சி விளம்பரங்கள் குறித்தும், வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் கட்சி விளம்பரங்களை எழுதக் கூடாது. தனியாருக்கு சொந்தமான சுவர்களில் கட்சி சின்னங்களை வரையும்போது, உரிமையாளரிடம் அனுமதிபெற வேண்டும். அதனை தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்து பொதுமக்களுக்கு இடையூறும்  இல்லாமல் கட்சி பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தனர்.

Related Stories: