குலை நடுங்க வைக்கும் குப்பை புகை

சிவகாசி, மார்ச் 14: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியும், சிவகாசியில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளன மற்றும் போஸ்டர்கள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இந்தியா முழுவதும் மக்களைவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான உடன் முக்கிய நகரங்களில் அரசியல் கட்சி போஸ்டர்கள், பேனர்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, அரசியல் கட்சி பிரமுகர்கள் வாகனங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலாகி 3 நாட்களுக்கு மேலான நிலையிலும், சிவகாசியில் அரசியல் கட்சி விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர். சிவகாசி-திருத்தங்கல் ரோடு, விருதுநகர் ரோடு ஆகிய இடங்களில் சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதே போல் அரசு அலுவலகங்களிலும் அரசு சார்ந்த திட்டங்கள் அறிவிப்பு போஸ்டர்கள், விளம்பர பேனர்களும் அகற்றப்படாமல் உள்ளது. அரசியல் கட்சிக்கொடி கம்பங்களும் அகற்றப்பட்வில்லை. இதனால் சிவகாசி பகுதியில் மக்களைவை தேர்தலுக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படாததால் தேர்தல் விதி மீறல்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அரசியல் கட்சியினரிடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் அதிகாரிகள் சிவகாசி நகராட்சி பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை பராபட்சமின்றி மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: