முயல் கறியுடன் ஒருவர் கைது

கூடலூர், மார்ச் 14: தேயிலை தோட்டங்களுக்குள் வரும் காட்டு முயலை வேட்டையாடி கறி விற்பனை செய்யும் ஆசாமியை, குமுளி கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.குமுளி செங்கரை பகுதியில் காட்டு முயல்கறி விற்பனை நடைபெறுவதாக குமுளி கேரள வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ரேஞ்சர் ஜெயசந்திரன் தலைமையில் மகேஷ், பிரகாஷ் கொண்ட வனத்துறையினர் செங்கரை புதுக்காடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த முருகன் (49) வேட்டையாடிய முயல் கறியைதனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தார்.சமையல் செய்த ஒன்றரைகிலோ காட்டு முயல் கறியுடன் முருகனை கைது செய்ய வனத்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், செங்கரை எஸ்டேட் பகுதியில் கண்ணி வைத்து முயல்களை வேட்டையாடி விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து முருகன் வீட்டை சோதனை செய்த வனத்துறையினர் முயல் மற்றும் சிறு வனவிலங்குகளை பிடிக்கும் 13 கண்ணிகளை கைப்பற்றினர்.

Related Stories: