நவீன இயந்திரத்தால் வைக்கோல் கட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்

ஆண்டிபட்டி மார்ச் 14: ஆண்டிபட்டி பகுதியில் நவீன இயந்திரத்தால் வைக்கோல் கட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளது. நகரைச் சுற்றி குன்னூர், அமைச்சியாபுரம், சீரெங்கபுரம், கன்னியமங்கலம், டி. வாடிப்பட்டி டி.அணைக்கரைப்பட்டி,டி.தர்மத்துப்பட்டி புலிமான்கோம்பை, பாலக்கோம்பை, ராமகிருஷ்ணாபுரம், தெப்பம்பட்டி, ராஜதானி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட

கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். கடந்த காலங்களில் விவசாயிகள் விவசாய நிலங்களில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தனர்.மேலும் கால்நடைகளை அதிகமாக பயன்படுத்தி உழவடை பணிகள் உள்ளிட்டவைகளை செய்தனர். ஆனால் காலப்போக்கில் விவசாயிகள் பல்வேறு பணிகளை தேடி சென்று விட்டதால், விவசாய நிலத்தில் கால்நடைகளின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி பல்வேறு பணிகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது மேற்கண்ட கிராமங்களில் நெல் அறுவடைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் நவீன இயந்திரத்தின் மூலமா வைக்கோல்களை (அறுவடை செய்து )கட்டுகளாக தயாரிக்கப்படுகின்றனர். இதனால் விவசாய பணிகள் மிக வேகமாக நிறைவடைவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவிவசாய நிலங்களுக்கு வேலையாட்களே தேடி வந்து விவசாய பணிகளை செய்தனர். இதனால் விவசாயம் செய்வதற்கு ஆர்வம் இருந்தது. ஆனால் தற்போது நெல் அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு கூலியாட்கள் வருவது இல்லை. நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சிறிது காலதாமதமாக வந்தாலும் விரைவாக பணிகள் முடிகிறது. இதனைத் தொடர்ந்து வைக்கோல் கட்டு தயாரிக்கும் பணியும் இந்திர மூலமேநடைபெறுவதால் விவசாயிகளுக்கு எவ்வளவோ பணிகள் குறைகிறது. முன்பு மாதிரி வைக்கோலை சுமந்து படப்பு போடும் பணியும் குறைந்துள்ளது. தற்போது கட்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து ஒரு கட்டு ரூ.150க்கு விற்பனை செய்து வருகிறேன். இதனால் பணிச் சுமை குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Related Stories: