சிவகங்கை எம்பி தொகுதிக்கான தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு

சிவகங்கை, மார்ச். 14: சிவகங்கை மக்களவை தொகுதி தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக கலெக்டர் ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தேவகோட்டை ஆர்டிஓ ஈஸ்வரி (காரைக்குடி சட்டமன்ற தொகுதி), ஆயத்தீர்வை உதவி ஆணையர் ஈஸ்வரி (திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி), சிவகங்கை ஆர்டிஓ செல்வக்குமாரி (சிவகங்கை சட்டமன்ற தொகுதி) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருவாசகம் (மானாமதுரை சட்டமன்ற தொகுதி) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருவாசகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மானாமதுரை தாசில்தார் யாஸ்மின், இளையான்குடி தாசில்தார் பாலகுரு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பறக்கும் படை அலுவலர்களின் செல் எண் அறிவிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளின் பறக்கும்படை அலுவலர்கள் பெயர் மற்றும் செல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு ஜெயநிர்மலா (சிறப்பு தாசில்தார்-9488778100), சேகர் (கோட்ட ஆய அலுவலர்-9442678444), காசி (தாசில்தார்-.702546316). காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மூர்த்தி (சிறப்பு தாசில்தார்-8754200835), ஜெயலெட்சுமி (சிறப்பு தாசில்தார்-9842608600), காஜாமுகமது (சிறப்பு தாசில்தார், -9047668220). திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மாணிக்கவாசகம் (சிறப்பு தாசில்தார்-9444445401), சுமதி (சிறப்பு தாசில்தார்-9786309069), ரத்னவேல்பாண்டியன் (சிறப்பு தாசில்தார்- 9443611193). மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு செந்தில்வேலு (தாசில்தார்-9443406844), சந்தானலெட்சுமி (கோட்ட ஆய அலுவலர்-9443862003, 8110855504), வேணு (சிறப்பு தாசில்தார், -9842271095).

Related Stories: