தேர்தல் விதிமுறை மீறலா? ‘ஆப்’ல் போட்டோ அனுப்பினால் அடுத்த நிமிடம் வரும் பறக்கும் படை

காரைக்குடி, மார்ச் 14: தேர்தல் விதிமுறை மீறல் குறித்து ‘ஆப்’பில் போட்டோ எடுத்து அனுப்பினால், அதற்கு என அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்.18ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 19ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் முடிவு 26ம் தேதியும், பரிசீலனை 27, மனு திரும்ப பெற கடைசி நாள் 29ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவித்ததில் நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து வருவாய் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தலில் தவறு செய்பவர்களை கண்காணிக்க தாசிந்தார் தலைமையில் போலீஸ் எஸ்.ஐ கொண்ட 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தவிர விதிமுறை மீறல்களை ஆப் பில் படம் எடுத்து அனுப்பினால் சம்மந்தப்பட்ட பகுதிக்கு பறக்கும் படையினர் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பார்க உள்ளனர்.

இதுகுறித்து தாசில்தார் பாலாஜி கூறுகையில், ‘தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தொகுதியை பொறுத்தவரை தாசில்தார்கள் மூர்த்தி, ஜெயலட்சுமி, காஜாமுகம்மது ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது இதில் ஒரு போலீஸ் எஸ்.ஐ மற்றும் வீடியோர் கேமாரமேன் இருப்பார்கள். ‘சிவிஜில்’ என்ற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேர்தல் விதிமுறை மீறல்களை போட்டோ எடுத்து அனுப்பினல் சம்மந்தப்பட்ட பறக்கும் படை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். தவிர தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்’ என்றார்.

Related Stories: