காத்திருக்கும் ஆபத்து 10ம்வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

ராமநாதபுரம், மார்ச் 14: தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வு வரும் 29ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 75 தேர்வு மையங்களில் 8,606 மாணவிகள்,,8366 மாணவர்கள் என மொத்தம் 16,972 பேர் தேர்வு எழுதுகின்றனர்.தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 12546 பள்ளிகளில் 9,59,618 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 38,176 பேர் எழுதுகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் 3,731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 133 புதிய தேர்வு மையங்கள் உள்ளது.இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 152 சிறை கைதிகள் எழுதுகின்றனர். புழல், திருச்சி பாளை மற்றும் கோவை என 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: