பொதுமக்கள் ‘டவுட்’ மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் மக்கள் உற்சாகம்

மேலூர், மார்ச் 14: மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் மக்கள் உற்சாகமாக மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். மேலூர் அருகே சருவலையபட்டி ஊராட்சியில் உள்ளது நல்லி அய்யனார் கோயில். இதற்கு சொந்தமான கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. கரையில் சுற்றி திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அறிவிக்கப்பட்டவுடன் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி மீன் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டனர். தாங்கள் கொண்டு வந்த வந்திருந்த வலை, கச்சாவால் மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, அயிரை என சிறு மீன்கள் முதல் சுமார் 1 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டது. சருகுவலையபட்டி ஊராட்சி கண்மாய்களில் மட்டும் நேற்றுடன் சேர்ந்து இதுவரை 5 மீன்பிடி திருவிழா நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: