சுவர் விளம்பரம் அழிப்பு தீவிரம் மாவட்டம் திரையில் தெரிந்தால் மட்டும் போதுமா ஒப்புகை சீட்டில் வேறு சின்னம் பிரிண்டானால் என்ன செய்வது?

மதுரை, மார்ச் 14: மதுரை மாநகராட்சியில் நடந்த வாக்குப்பதிவு குறித்த செயல்விளக்கத்தின் போது யாருக்கு ஓட்டளித்தோம் என்ற ஒப்புகை சீட்டு வெளியில் வராமல் திரையில் தெரிந்தது. இதனால் மக்கள் சீட்டில் வேறு சின்னம் பிரிண்ட் ஆனால் என்ன செய்வது என சந்தேகத்தை கிளப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. கடந்த முறை வாக்குப்பதிவு இயந்திரன் மூலம் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டு மட்டுமே போட முடியும். இந்த முறை யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு முறையை இந்திய தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடுதலாக விவிபேட் என்ற கருவி இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்விளக்க பணியில் தேர்தல் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.அதன்படி நேற்று மதுரை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் நடந்தது. பொதுமக்கள் வாக்களிக்கும் பொத்தானை அழுத்தியதும், பீப் சத்தத்துடன் பச்சை விளக்கு எரிந்தது. அந்த கருவியில் இருந்து யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு வெளியில் வரவில்லை. திரையில் மட்டுமே நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற விபரத்தை காட்டியது. இதனால் குழப்பம் அடைந்த மக்கள் ஒப்புகை சீட்டை எங்களிடம் ஏன் தர முடியாது எனக்கேட்டனர். அதற்கு அதிகாரிகள், ‘ஒப்புகை சீட்டு வரும், அது அந்த கருவியில் இருக்கும் காலிப்பெட்டியினுள் விழுந்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றனர். அதற்கு மக்கள், ‘நான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை திரையில் தெரிகிறது. ஒப்புகை சீட்டில் வேறு சின்னம் பிரின்ட் ஆனால் என்ன செய்வது’ என சந்தேகத்தை கிளப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: