மேலூர் கோர்ட்டில் கிரானைட் உரிமையாளருக்கு பிடிவாரண்ட்

மேலூர், மார்ச் 14: மேலூர் பகுதியில் தொடரப்பட்ட கிரானைட் வழக்குகளில் 42 வழக்குகளை குற்றவியல் கோர்ட் ஒத்திவைத்தது. வழக்கில் தொடர்ந்து ஆஜராகாத கிரானைட் உரிமையாளர் ஒருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி கலெக்டர் தொடர்ந்த வழக்குகளில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் உட்பட மற்ற கிரானைட் நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் 29 வழக்குகள் நேற்று மேலூர் குற்றவியல் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தல் பணிகள் துவங்கியதால் அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வேண்டிய ஊழியர்கள் யாரும் ஆஜராகவில்லை.தொடர்ந்து பிஆர்பி கிரானைட் நிறுவனம் மற்றும் தனி நபர்கள் மீது போலீசார் தொடர்ந்த 13 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. மொத்தம் உள்ள 42 வழக்குகளையும் 5ந்தாக பிரித்து மார்ச், மே மாதங்களுக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் பழனிவேல் உத்தரவிட்டார்.மேலும் ஒத்தக்கடை பகுதியில் இட மோசடி தொடர்பாக சோழா கிரானைட் உரிமையாளர் கண்ணன் மீது போலீசார் தொடர்ந்திருந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தொடர்ந்து இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related Stories: