போலீசார் புலம்பல் மகளிர் தின விழா மாநகராட்சி மாஜி கமிஷனருக்கு விதித்த தண்டனைக்கு தடை

மதுரை, மார்ச் 14: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையராக இருந்த அனீஷ்சேகருக்கு விதித்த ஒரு வார சிறை தண்டனைக்கு தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டதுமதுரையை சேர்ந்த அகமது இப்ராஹிம் தொடர்ந்த வழக்கில் மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு 4 வாரங்களுக்குள் பதவி உயர்வு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, வருவாய்த்துறை உதவியாளராக பணியாற்றிய விஜயகுமார், அப்போது மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த அனீஷ்சேகர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன், அனீஷ்சேகர் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இதற்கு தண்டனை வழங்காமல் இருந்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே, அனீஷ்சேகருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டிருந்தார். தற்போது அனீஷ்சேகர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை செயல் இயக்குநராக உள்ளார். இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அனீஷ் சேகர் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த கோரிக்கை தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை மறைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார் .இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிஎன்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அனீஷ்சேகருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories: