பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கம்பீரமாக நிற்கும் பனைமரங்கள் நிலக்கோட்டை தொகுதியில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

செம்பட்டி, மார்ச் 14: நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு முதல்கட்ட பணி செய்தல் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நிலக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும்,  நிலக்கோட்டை தாசில்தாருமான நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை இடைத்தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாக இணைந்து வருகிறது. இதனால் பல்வேறு நிலையிலிருந்து அனைத்து கட்சிகளும் இங்கு போட்டியிடலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகளவு நிலக்கோட்டை தொகுதியை நோக்கி அரசியல் கட்சியினர்கள் படை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. நிலக்கோட்டை தொகுதியை பொறுத்த அளவுக்கு 18 வாக்கு சாவடிகளை பதற்றமானவையாக அறிவித்து, தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். நிலக்கோட்டை தொகுதியில் 7 இடங்களில் வாகன சோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளபட்டி பிரிவு, அணைப்பட்டி, செங்கட்டாம்பட்டி பிரிவு, கட்டக்காமன்பட்டி-மின்சார வாரியம் அலுவலகம் அருகே, காமுபிள்ளைசத்திரம் பிரிவு, கொடைரோடு டோல்கேட், வத்தலக்குண்டு ஆனா  பிரிவு, நிலக்கோட்டை டிஎஸ்பி அலுவலகம் அருகே என 7 இடங்களில் 24 மணி நேரமும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நிலக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் ஏதேனும் சட்டம் ஒழுங்கு மற்றும் துறை ரீதியான தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார் வந்தால் உடனே தகவல் கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories: