வன பாதுகாப்பு தேசிய மாநாடு

கொடைக்கானல், மார்ச் 14:  கொடைக்கானலில் வன சூழல் பாதுகாப்பு பற்றிய 11வது தேசிய மாநாடு கடந்த இரு தினங்களாக நடந்தது. ஜேஐசிஏ என்ற சர்வதேச அமைப்பும், வனத்துறையும் இணைந்து நடத்திய மாநாட்டில் பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப அடிப்படையில் காடுகளை பாதுகாப்பது, கண்காணிப்பது, மதிப்பிடுவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. மாநாட்டை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோ லிகர்  துவக்கி வைத்தார். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான ஐதராபாத் தேசிய தொலை உணர்வு மையம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், வன பாதுகாப்பு மையம், கோவை வன மரபியல் மற்றும் இனப்பெருக்க மையத்தை சேர்ந்தவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

மாநாட்டில், ஜேஐசிஏ அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் டோரு யும்மாச்சி, கூடுதல் தலைமை மேம்பாட்டு நிபுணர் வினித் சரின், வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர்கள் சையது முஸம்மில் அப்பாஸ், உபாத்யாய், மல்லேசப்பா, ஜேஐசிஏ அமைப்பின் சஞ்சய் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வன மேம்பாடு, சூழல் பாதுகாப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும் தொழில்நுட்ப ஆலோசனைகள் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டன.

Related Stories: