கயிறு மில்லில் பயங்கர தீ விபத்தால் பரபரப்பு

உத்தமபாளையம், மார்ச் 14: உத்ததமபாளையம் அருகே கயிறு மில்லில் மின் கசிவுகாரணமா பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள அனுமந்தன்பட்டி 18ம் கால்வாய் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கயிறு மில் உள்ளது. இந்த மில்லில் நேற்று மதியம் 1 மணியளவில் மில் அருகே உள்ள மின்மாற்றியில் மின் கசிவு ஏற்பட்டு அங்குள்ள நார் மற்றும் தென்னை மட்டைகளில் தீபற்றியது. இது குறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த எந்திரங்கள் மீதும் பரவியது. காற்றின் வேகத்தால் தீ கொழுந்து விட்ட எரிய தொடங்கியது.   

இதனால் தீயணைக்கும் பணி தாமதம் ஏற்பட்டது. தீ விபத்தால் மில்லில் உள்ள இரண்டு அறைகளிலும் தீபற்றி எரிந்ததால் அங்கு இருந்த விலை உயர்ந்த எந்திரங்கள் எரிந்தது. தீ விபத்து மதியம் 1 மணிக்கு ஏற்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்களும் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர். சுமார் 5 மணி நேரத்திற்கு பின்புதான் தீயை அணைத்தனர்.தீ விபத்தால் தயாரிக்கப்பட்ட கயிறுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த அழகுசாதன பொருட்கள் மற்றும் தயாரிப்பு எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதனால் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Related Stories: