பொள்ளாச்சி ஆபாசபட விவகாரம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திருப்பூர், மார்ச் 14:  பொள்ளாச்சி ஆபாசபட விவகாரம் முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் ஏற்பட்ட சீராழிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மக்கள் விழிப்பணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 4பேர் கும்பல் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் முகநூல் மூலம் பழகி அவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதில் குற்றம் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் அரசியல் பின்னணி கொண்டவர்களாக இருப்பதால், போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. பொள்ளாச்சி-கேரளா எல்லைப்பகுதியில் உள்ள தனியார் ரீசாட்டுக்கு இளம்பெண்களை அலைந்து சென்று வாலிபர்கள் ஆபாச வீடியோ எடுத்து அவர்களை  மிரட்டி பாலியல் துன்புறுத்தால் செய்துள்ளனர்.

 இதனால் பல கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் அந்த வாலிபர்களின் தந்தை, தாய், சகோதரி ஆகியோரின் படங்களை வெளியிட வேண்டும். முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் ஏற்பட்ட சீராழிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்மணி கூறியுள்ளார்.

Related Stories: