மலைவாழ் மக்களின் டிராக்டரை சீரமைக்க கோரிக்கை

உடுமலை, மார்ச் 14:  உடுமலை அருகே மழைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட டிராக்டர்  பழுதாகியுள்ளது. இதை சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, தளிஞ்சி வயல் மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு 140 குடும்பத்தினர் வசிக்கின்றனர். தேன், கடுக்காய் விற்பது மட்டுமின்றி, விவசாயமும் இவர்களது முக்கிய தொழிலாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் நெல் மற்றும் பீன்ஸ் பயிரிட்டுள்ளனர். மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு கண்காணிக்கின்றனர்.

 இவர்கள் உழவு பணிக்காக, அரசு சார்பில் இலவசமாக டிராக்டர் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி உழவு செய்து வந்தனர். தற்போது இந்த டிராக்டர் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. இதனால் உழவுக்கு காளைகளையே பயன்படுத்துகின்றனர். எனவே இந்த டிராக்டரை பழுது நீக்கி கொடுத்தால், பயனுள்ளதாக இருக்கும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: