கூவமூலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள்

பந்தலூர், மார்ச் 14 : பந்தலூர் அருகே உள்ள ேதயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வர துவங்கியுள்ளது. இந்நிலையில், பந்தலூர் கூவமூலை, அத்திக்குன்னு, தேவாலா,சேரம்பாடி, அய்யன்கொல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யானைகள் முகாமிட்டு வருவதால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் கூவமூலை அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த  யானைகளால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். அதில் ஒரு யானை கூவமூலை குடியிருப்பு பகுதியில் நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள்  துரத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: