ஏற்றுமதி நிறுவனங்களின் மறைமுக சலுகைக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

திருப்பூர், மார்ச் 14:  பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உள்ளீட்டு மறைமுக வரிச்சலுகையாக  ரூ.6 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு ஏஇபிசி துணை தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஏஇபிசி துணை தலைவர் சக்திவேல் கூறியிருப்பதாவது:பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மின் கட்டணம், டீசல், பெட்ரோல், போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றுக்கு தினமும் லட்சக்கணக்கில் தொகை செலவிடுகின்றனர். இந்த செலவுகள் குறித்து பில் கோப்புகளை சுங்கவரி துறைக்கு சமர்ப்பிக்கின்றனர். இதற்கு மத்திய ஜவுளித்துறை உள்ளீட்டு மறைமுக சலுகை வழங்கி வருகிறது. எனவே இந்த நிதியை விரைவில் வழங்க வேண்டுமென மத்திய ஜவுளித்துறைக்கு ஏஇபிசி துணை தலைவர் சக்திவேல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

 இதை தொடர்ந்து மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின் செலவினங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இத்தொகை வழங்க பரிந்துரை செய்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஜவுளித்துறை செயலாளர் ஆகியோருக்கு ஏஇபிசி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சக்திவேல் கூறினார்.

Related Stories: