உடுமலை பகுதியில் வைக்கோல் விற்பனை தீவிரம்

உடுமலை, மார்ச் 14:  உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பகுதியில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முதல் போக சாகுபடி முடிந்து, தற்போது பல இடங்களில் 2ம் போக நெல் அறுவடை நடந்து வருகிறது. நெல் அறுவடையின்போது கிடைக்கும் வைக்கோல் மற்றும் மக்காச்சோள தட்டு போன்றவற்றை தோட்டங்களில் விவசாயிகள் சேமித்து வைத்துள்ளனர்.கால்நடை தீவனத்துக்காக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வைக்கோல், மக்காச்சோள தட்டுகளை வாங்கி செல்கின்றனர். கோடை வறட்சி காரணமாக, தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் முன்கூட்டியே பலர் அதிகளவில் வைக்கோல் போர்களை வாங்கி இருப்பு வைக்கின்றனர்.  இவற்றை லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். வைக்கோல்கள் மும்முரமாக விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: