ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வரப்பட்ட ரூ. 76.40 லட்சம் ஊட்டியில் பறிமுதல்

ஊட்டி, மார்ச் 14: ஊட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வரப்பட்ட ரூ.76.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் என ெமாத்தம் 18 குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடக்

கிறது.

இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 76.40 லட்சம் ைவத்திருந்தது ெதரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்., மையத்தில் நிரப்ப எடுத்துவரப்பட்ட பணம் என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். ேமலும், ஆவணங்களை சமர்ப்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: