தேர்தல் கண்காணிப்பு குழு எடுக்கும் வீடியோவை கட்டணம் செலுத்தி பெறலாம்

ஈரோடு, மார்ச் 14:   நாடாளுமன்ற  தேர்தலில் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை குழுக்கள், நிலை கண்காணிப்பு  குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்வை குழுக்கள், கணக்கு  குழுக்கள் உள்ளிட் பல்வேறு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது.இக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடுவது, அரசியல் கட்சி  நிர்வாகிகள் மற்றும் பிரசாரங்களை கண்காணிப்பது,பொதுமக்கள் தெரிவிக்கும்  புகார்களின் அடிப்படையில் ரெய்டு நடத்துவது உள்ளிட்ட பணிகளை  மேற்கொள்வார்கள். இக்குழுவினர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும்  வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்படும் காட்சிகளை  பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு  ஒரு முறை காட்சிகள் பதிவிறக்கம் செய்யப்பட உள்ளது. தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் வீடியோக்களை பொதுமக்கள்,  அரசியல் கட்சியினர் என யார் வேண்டுமானாலும் கண்காணிப்பு குழுவினரிடம்  விண்ணப்பித்து, ரூ.300 கட்டணம் செலுத்தி பெறலாம்.

Related Stories: