ரூ.19 லட்சத்துக்கு வேளாண் பொருள் விற்பனை

கொடுமுடி, மார்ச் 14: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய், கொப்பரை, எள், நிலக்கடலை விற்பனைக்கான ஏலம் நேற்று நடந்தது. இதில், 7,459 தேங்காய் ரூ.67 ஆயிரத்து 668க்கும்,  கொப்பரை 8,181 கிலோ ரூ.6 லட்சத்து 49 ஆயிரத்துக்கும், எள் 9,269 கிலோ ரூ.11 லட்சத்து 48 ஆயிரத்து 206க்கும், நிலக்கடலை 2,288கிலோ  ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 76க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 83 ஆயிரத்து 952க்கு விற்பனையானது.கொப்பரை முதல் தரம் அதிகபட்சமாக ரூ.103.89க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90.75க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.92.05க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.89க்கும், சிவப்பு எள் அதிகபட்சமாக ரூ.121.59க்கும், குறைந்தபட்சமாக ரூ.100.29க்கும், கருப்பு எள், அதிகபட்சமாக ரூ.148.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.115.40க்கும், வெள்ளை எள் அதிகபட்சமாக ரூ.114.49க்கும், குறைந்தபட்சமாக ரூ.107.86க்கும் விற்பனையானது.இதைத்தொடர்ந்து, நிலக்கடலை அதிகபட்சமாக ரூ.53.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.47.20க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.19 லட்சத்து 83 ஆயிரத்து 952க்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனையானது.

Related Stories: