மண்பானையில் குக்கர் தொழிலாளிக்கு விருது

ஈரோடு, மார்ச் 14: ஈரோடு மாவட்டம் முகாசி அனுமன் பள்ளியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கனகராஜ் (37). இவர் பி.ஏ., பி.எட் படித்து விட்டு சிறுவயதிலேயே மண்பாண்ட தொழில் மீது கொண்ட ஆர்வத்தால் தனது தொழிலை செய்ய தொடங்கினார்.

அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க பல புதுமைகளை புகுத்தி உள்ளார். குறிப்பாக குக்கர், தண்ணீர் குடுவை, தயிர்சட்டி, அணையா விளக்கு போன்றவற்றை தயாரித்துள்ளார். மண் பாண்ட தொழிலில் இவரது சிறப்பான படைப்புகளை பாராட்டி தமிழ்நாடு பூம்புகார் கைவினை பொருட்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி கழகத்தின் சார்பில் மண்பாண்ட தொழிலில் சிறந்த கைவினை பொருட்கள் தயாரித்ததற்காக  தொழிலாளி கனகராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் காசோலையை தொழில்துறை அமைச்சர் பென்ஜமீன் வழங்கி பாராட்டினார்.விருது பெற்ற கனகராஜ், ஈரோடு கலெக்டர் கதிரவன், மொடக்குறிச்சி எம்எல்ஏ., சிவசுப்ரமணியம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து கனகராஜ் கூறுகையில்,`மண்பாண்ட பொருள் தயாரித்தது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்ற விருது வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு மேலும் ஊக்கம் ஏற்பட்டு மண்பாண்ட தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்’ என்றார்.

Related Stories: