பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுதேர்வை 6539 பேர் எழுதுகின்றனர்

பொள்ளாச்சி, மார்ச் 12:  பொள்ளாச்சி  கல்வி மாவட்டத்தில், வரும் 14ம் தேதி துவங்கும் 10ம் வகுப்பு  பொதுத்தேர்வை 6539 பேர் எழுத உள்ளனர். 38 மையங்களில் தேர்வு நடக்க உள்ளதாக கல்வி  அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி,  வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, நகராட்சி பள்ளி,  சுயநிதி பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி என 89 பள்ளிகளில்  படிக்கும் மாவர்கள், வரும் 14ம் தேதி துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுத உள்ளனர். இதில், கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்று அரசு  உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 6304 மாணவ,  மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதுபோல் 235 பேர் தனித்தேர்வர்களாக  உள்ளனர். கல்வி மாவட்டத்தில் மொத்தம் 6539 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுத உள்ளனர்.  

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  அந்தந்த பள்ளிகளிலே ஹால்டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. கல்வி  மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்தம் 38 மையங்களில் நடக்கிறது.   தனித்தேர்வர்களின் மாணவிகளுக்கு, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை  பள்ளியிலும். மாணவர்களுக்கு உடுமலை ரோடு ஏஎம்எஸ் மெட்ரிக் பள்ளியிலும்  தேர்வு எழுதுகின்றனர்.  தேர்வு துவங்க இன்னும் சிலநாட்களே உள்ள  நிலையில் வினாத்தாள்கள்  மற்றும் தேர்வுக்கான உபகரணங்கள் அனைத்தும் வரப்பெற்றுள்ளது. அவை, தனி  மையத்தில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தேர்வு  மையங்களை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.  தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க 40க்கும் மேற்பட்ட பறக்கும்  படை அமைக்கப்பட்டுள்ளனர். சுமார் 450 அறை கண்காணிப்பாளர்களும்   நியமிக்கப்படுகின்றனர் என, கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: