வெள்ளகோவிலில் குடி தண்ணீர் தட்டுப்பாடு

வெள்ளகோவில், மார்ச் 12:வெள்ளகோவில் நகராட்சி பகுதிக்கு காவிரி ஆற்றிலிருந்தும் அமராவதி ஆற்றிலிருந்தும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றிலிருந்து ஒரு நாளைக்கு 45 லட்சம் லிட்டர் குடிநீரும், அமராவதி ஆற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 13 லட்சம் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது. அமராவதி ஆறு வற்றி விட்டதால் கடந்த ஒரு மாதமாக  தண்ணீர் விநியோகம் சரிவர இல்லை. காவிரி ஆற்று தண்ணீர் மட்டும் விநியோகிக்கப்படுகிறது. அமராவதி ஆற்று தண்ணீர் கிடைக்காததால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

காவிரி ஆற்றிலும் தண்ணீர் குறைந்து வருவதால், காவிரி தண்ணீருக்கும் விரைவில் தட்டுப்பாடு ஏற்படும். தண்ணீர் தட்டுப்பாட்டால் லாரி தண்ணீர் விற்பனை ஜோராக நடக்கிறது. 14 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட ஒரு லாரிதண்ணீர் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற உபயோகத்திற்கு பயன்படும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. எனவே நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை நீடித்து வருகிறது. கிராமங்களில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து வருவதால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: