புகையிலை, மது விற்ற 10 பேர் கைது

திருப்பூர், மார்ச் 12:திருப்பூர்  மாநகர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, மது விற்பனையில் ஈடுபட்ட 10  பேரை போலீசார் கைது செய்து 91 மதுபாட்டில்கள், 12 கிலோ புகையிலை மற்றும்  79 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகர் மற்றும்  புறநகர் பகுதிகளில் புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மது விற்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்  உள்ள தினசரி சந்தையில் நடராஜ்(57) என்பவர் தனது கடையில் விற்பனைக்காக 12  கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தார். இதை தெற்கு போலீசார் பறிமுதல்  செய்தனர். தாராபுரம் ரோடு, புதூர் பிரிவு பகுதியில் உள்ள கடைகளில்  விற்பனைக்கு வைத்திருந்த 79 பாக்கெட் புகையிலையை ரூரல்  போலீசார் பறிமுதல் செய்ததோடு 3 பேரை கைது செய்தனர். வஞ்சிபாளையத்தில்  உள்ள ரெஸ்ட்ரான்ட், காங்கயம் ரோடு நல்லூர் டாஸ்மாக் கடை அருகே,  மணியகாரம்பாளையம், பள்ளிகாட்டுப்புதூர், பழக்குடோன், ஆண்டிபாளையம் ஆகிய  பகுதியில் உள்ள, டாஸ்மாக் மதுக்கடை அருகே மது விற்பனை செய்த  சரவணக்குமார்(29), ஜெயக்குமார்(38), கணேசன்(28), ஜோசப் பிரவீன்(24) உட்பட 6  பேரை போலீசார் கைது செய்து 91 மதுபாட்டில்களை பறிமுதல் செயதனர்.

Related Stories: