மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றம்

கோவை, மார்ச் 12: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் தேர்தல் பணிகள் முடியும் வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பானது நேற்று முன் தினம் மாலை அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்களுக்கு அறிவிப்பு சென்றடையவில்லை இதனால் நேற்று வழக்கம் போல் மக்கள் மனுக்களை கொடுக்க கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (நேற்று) நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தான் நடைபெறும் என தெரிவித்தனர். எனினும் மக்கள் மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் மனு அளிக்க வேண்டும் என காத்திருந்தனர். காலை முதல் மதியம் வரை காத்திருந்து மனுக்கள் அளிக்காமல் திரும்பி சென்றனர்.இது குறித்து மனு அளிக்க வந்தவர்கள் கூறுகையில், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி எங்களுக்கு தெரியாது. மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து என்கிற விவரமும் இங்கு வந்த பிறகு தான் தெரியும்’ என்றனர்.

Related Stories: