மாவட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தேர்தல் நடத்தை விதிகள் என்ன ?

தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் என்ன என கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பெரியகுளம்(தனி), ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள அரசுத் துறைகளின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள், வளாகங்கள், சுவர்களில் அரசியல் தொடர்பான விளம்பரங்களை காட்சிப்படுத்துவதோ, ஒட்டுவதோ கூடாது. மேலும் ஏதேனும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குறைதீர் கூட்டங்கள், மக்கள் தொடர்பு முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் போன்ற அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் அரசு வாகனங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கலெக்டர் பல்லவிபல்தேவ் அறிவித்துள்ளார்.

Related Stories: