கொத்தமல்லி கிலோ ரூ.13

சின்னமனூர் , மார்ச் 12: சின்னமனூர் பகுதி கிராமங்களில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து கொத்தமல்லி சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இங்கு ஓடைப்பட்டி, தென்பழனி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, அப்பிபட்டி, கரிச்சிபட்டி, அய்யனார்புரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, கோயில்பட்டி பகுதிகளில் வாழை, தென்னை, திராட்சை பயிறுகளில் ஊடுபயிராகவும், குறைந்தளவில் நேரடி பயிராகவும் கொத்தமல்லி விவசாயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.13 முதல் ரூ.15 வரையில் விலைபோகிறது.

Related Stories: