வரத்து அதிகம் பூக்கள் விலை சரிந்தது

ஆரல்வாய்மொழி, மார்ச் 12:  தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி, நெல்லை மற்றும் மதுரை, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் வருகிறது. தற்போது மல்லி, பிச்சி, முல்லை போன்ற பூக்களின் வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால் இவைகளின் விலையும் குறைவாக விற்பனையாகி வருகிறது. அதேவேளை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கேந்தி, அரளி, கொழுந்து, மரிக்கொழுந்து, வாடாமல்லி, சம்பங்கி, கோழிப்பூ உள்ளிட்ட பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு பூக்கள் குறைந்த அளவே வந்துகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக பூமாலைகளின் விலை உயர்ந்துள்ளது. தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று தோவாளை அரளி ₹100, சேலம் அரளி ₹100, சம்பங்கி ₹80, கொழுந்து ₹100, மரிக்கொழுந்து ₹100, மஞ்சள் கேந்தி ₹60, ஆரஞ்சு கேந்தி ₹70, கோழிப்பூ ₹60, துளசி ₹20க்கு விற்பனையானது.

Related Stories: