பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரம்

அரியலூர்,மார்ச் 8: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக கலைக் குழுவினர் மூலம்  ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் சுகாதாரக்கேடு, சுற்றுச் சூழல் பாதிப்புகள் மற்றும் தீய விளைவுகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்கள் குறித்தும் மக்களிடையே வாகன பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு வாகன பிரசார கலைப்பயணத்தின் துவக்க விழா நடந்தது.

தேசியப் பசுமைப்படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  குணபாலினி வரவேற்றார். ஓசை கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவியருக்கு துணிப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதையடுத்து இப்பள்ளியிலிருந்து புறப்பட்ட பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட வன அலுவலர்  இளங்கோவன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்  செல்வராஜ் மற்றும் அரியலூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்  பிரபாகரன் பங்கேற்றனர்.

Related Stories: